ஐஏஎஸ்கள் மாற்றம்! முதலமைச்சர் முடிவின் பின்னணி…

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற (2021-22) நாள் முதல் அதிகாரிகளை இப்படி அதிரடியாக மாற்றியதே இல்லை- இப்போது மாற்றியிருக்கிறார்! யாரும் எதிர்பாராத ஒன்று நடந்திருக்கிறது! ‘இன்னும் கொஞ்ச நேரத்துல வரப்போவுது, இன்னும் ரெண்டு நாள்ல வந்துரும்’ என்று ஆருடம் சொல்லும் கதாசிரியர்களின் காதுகளுக்குப் போகாமலே இந்த இடமாற்றம் நடந்திருக்கிறது!

முதலமைச்சரின் பக்கத்தில் எப்போதுமே இருக்கிற அதிகாரிகளாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகிய மூவர் மட்டுமே பொதுப் பார்வைக்குள் வருகிறவர்கள். எப்போதும் முதலமைச்சரோடு இருக்கிறவர் என்ற அடையாளத்துடன் இருந்த சுகாதாரத்துறை செயலாளர், இடமாற்றம் செய்யப் பட்டிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் நெருக்கமான முகங்களாக அறியப்படுகிறவர்களின் துறை சார்ந்த ஐஏஎஸ்கள் மாற்றப் பட்டிருக்கிறார்கள். சுகாதாரம், நெடுஞ்சாலை, வருவாய், மதுவிலக்கு ஆயத்தீர்வை போன்ற முக்கிய துறைகளும் இதற்குத் தப்பவில்லை!

இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் விபரம் :

அடைப்புக்குள் ( ) முந்தைய பதவி ! பணீந்திரரெட்டி (வணிக வரித்துறை கமிஷனர்) உள்துறை செயலாளர். எஸ்.கே. பிரபாகர் (உள்துறை செயலாளர்) வருவாய் நிர்வாகத்துறை கமிஷனர்.
நசிமுத்தீன் (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர்) தொழிலாளர் நலன் மற்றும் தனித்திறன் மேம்பாடு துறை செயலாளர். ராதாகிருஷ்ணன் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர்) கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர்.

பிரதீப் யாதவ் (சென்னை மெட்ரோ ரயில் வாரிய மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை செயலாளர் இயக்குநர்) நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர்.
தீரஜ்குமார் (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர்) வணிகவரித்துறை கமிஷனர்/முதன்மை செயலாளர்.
செந்தில்குமார்(சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு அதிகாரி/ முதன்மை செயலாளர்) தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர். ஆனந்தகுமார்(தமிழக விளையாட்டு ஆணைய முன்னாள் உறுப்பினர்- செயலர்) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர்.
தாரேஷ் அகமது
(தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர்) ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனர். ஜெயகாந்தன் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர்) புவியியல் மற்றும் கனிம வளத்துறை கமிஷனர்.

நிர்மல்ராஜ் (புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர்) போக்குவரத்து துறை கமிஷனர். ஜெசிந்தா லாசரஸ்(வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் மறுகுடியமர்த்தல் துறை செயலாளர்) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர்.
கோபாலசுந்தரராஜ் (தென்காசி மாவட்ட கலெக்டர்) வணிகவரித்துறை இணை கமிஷனர்.
சங்கீதா(தமிழக சிவில் சப்ளை கார்பரேசன் இணை மேலாண் இயக்குநர்) வணிக வரித்துறை நிர்வாக கூடுதல் கமிஷனர்.
சிவராசு(திருச்சி கலெக்டர்) கோவை வணிகவரித்துறை இணை கமிஷனர்.
மதிவாணன் (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை கமிஷனர்) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கமிஷனர்.
ஆகியோர் புதிய பொறுப்புகளில் நியமிக்கப் படுவதாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆணை பிறப்பித்துள்ளார். அதேபோல், மரியம் பல்லவி பல்தேவ்- தொழிற்சாலைகள் துறை கூடுதல் செயலாளர்,

விஜயேந்திர பாண்டியன் (மின்னணு நிர்வாகத்துறை இயக்குநர்) கருவூலம் மற்றும் அக்கவுண்ட் துறை கமிஷனர்,
லாவ்லீனா (மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர்) உணவுபாதுகாப்பு துறை கமிஷனர், சந்திரகலா, (ராமநாதபுரம் முன்னாள் கலெக்டர்) தொழில் முதலீடு கழக இயக்குநர், ஜான் லூயீஸ்(நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை இணை செயலர்) வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை கமிஷனர் பொறுப்புகளில் நியமிக்கப் பட்டுள்ளனர்.

அருங்காட்சியக துறை இயக்குநர் ராமன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குநராகவும்,
தாட்கோ மேலாண் இயக்குநர் விவேகானந்தன், மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும், சென்னை முன்னாள் கலெக்டர் விஜயராணி, சேலம் பட்டுநூல் வளர்ப்பு கழக இயக்குநராகவும், பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி கழக கமிஷனர் பிரகாஷ், வரலாறு மற்றும் காப்பகங்கள் கமிஷனராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளர் பிங்கி ஜோயல், பொருளாதாரம் (ம) புள்ளியியல் துறை கமிஷனராகவும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் கருணாகரன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளராகவும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

கருவூலத்துறை கமிஷனர் வெங்கடேஷ், போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை கமிஷனர் சீதா லட்சுமி, சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துறை இணை செயலாளராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் பிரவீன் நாயர், மின்னணு நிர்வாகத்துறை இயக்குநராகவும், தமிழக பாட புத்தகம் மற்றும் கல்வி சேவை கழக மேலாண் இயக்குநர் மணிகண்டன், பள்ளிகல்வித்துறை இணை செயலாளராகவும், வரலாறு மற்றும் காப்பகங்கள் துறை முதன்மை கமிஷனர் ஹர்சகாய் மீனா, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளராகவும், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை கமிஷனர் என்.எம். ஷங்கர் ராவ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராகவும், தமிழக குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர்வாரிய இணை மேலாண் இயக்குநர் பிரதீப்குமார், திருச்சி கலெக்டராகவும், சேலம் : பட்டுநூல் வளர்ச்சித்துறை இயக்குநர் சாந்தி, தர்மபுரி கலெக்டராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் கலெக்டராகவும்,
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் சித்திக், சென்னை மெட்ரோ ரயில் கழக முதன்மை செயலாளர் மற்றும் மேலாண் இயக்குநராகவும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகாஷ், தென்காசி கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்துறைச் செயலாளரும் சுகாதாரத்துறைச் செயலாளரும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது, இயல்பான இடமாற்றம் போல் கடக்கக்கூடிய ஒன்றல்ல! அமைச்சர்களுக்கும், ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக இதன்மூலம் எதையோ உணர்த்தி போயிருக்கிறார் ! முதலமைச்சர் உணர்த்திய (அ) உணர்த்த நினைத்த விஷயங்களை இரண்டொரு நாளில் அறிவிப்பாகவே பார்க்கலாம்! ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *