“எப்பவும் லேட் ! ” ரெயிலுக்கு சிறை|

சென்னை விம்கோ நகரில் ரெயில் பயணிகளின் ‘ரெயில் சிறைபிடிப்பு’ போராட்டத்தால் பதற்றமான சூழல் உருவானது.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரெயில்,
ஒரு மணி நேர காலதாமதத்திற்கு
பின்னும் வர தாமதமானதால் பயணிகள் ஆத்திரமடைந்தனர்.

குறித்த நேரத்தில் ரெயில்களை இயக்க வலியுறுத்தியும், புறநகர் ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரியும்; கும்மிடிப் பூண்டியில் இருந்து சென்னை மார்க்கமாக சென்று கொண்டிருந்த மற்றொரு புறநகர் ரெயிலை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில்வே துறை அதிகாரிகளின் மெத்தன போக்கால் நாள்தோறும், தாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக பயணிகள், வேதனை தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை உள்ள ரெயில் நிலையங்களில் வடமாநிலத்தவர்களை பணியில் நியமித்து உள்ளதால் மொழிப் பிரச்சனை காரணமாக அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் பெற முடியவில்லை எனவும் அப்போது குற்றஞ் சாட்டினர். பயணிகளின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *