
பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள், நாளை பேரணி நடத்துகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியம், ஏலியம்பேடு ஊராட்சியில் உள்ள கிராம நத்தம் நிலத்தின் (சர்வேஎண்179/1) பூர்வகுடி மக்கள் ஏலியம்பேடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக உள்ளனர். அவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக்கோரி (12/03/2025 புதன்கிழமை காலை 10 மணிக்கு) பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப் படவுள்ளது. இதற்கான தயாரிப்பு கூட்டம் ஏலியம்பேடு கிராமத்தில் நடைபெற்றது.
டி.எஸ்.எஸ்.
