கடலூர் மாவட்டத்தில் நடக்கும் தொடர் லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் அரசு மதுபானக்கடையான டாஸ்மாக் மேலாளர், ஊழியர் என பலர் சிக்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சத்தியராஜ் நடத்தும் அதிரடி சோதனை பலரை கிலியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் கடலூர் மாவட்ட புதுப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு மேற்கொள்ள வரும் பொதுமக்களிடம் அதிகளவில் இலஞ்சம் பெறப்படுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பேரில் துணை ஆய்வுக்குழு அலுவலர் கடலூர் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத்துறை (பொறுப்பு) டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான காவல் குழுவினர் கடந்தவாரம் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 2,26,400- சிக்கியது.
சார் பதிவாளர் (பொறுப்பு) இசக்கியப்பன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. (கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களுக்கு, போலீஸ் DSP : 9994898628- Ins 1 : 9488805333
Ins 2 : 9498102842 ins 3 : 9994521505 நேரில்: எண் 06, காளியம்மன் கோயில் தெரு, மஞ்சகுப்பம், கடலூர் – 607 001. அலுவலகம்: 04142- 233816 Mail ID : dspcuddvac.tnpol@nic.in
அதேபோல் கடலூர் மாவட்டத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற TASMAC DM செந்தில்குமார் மற்றும் JA ராதாகிருஷ்ணன் கைது செய்யப் பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் செயல்படும் TASMAC கடை மற்றும் அலுவலங்களில் விஜிலென்ஸ் ரெய்டு வராமல் இருக்க கடலூர் மாவட்ட TASMAC மேலாளர் (DM) செந்தில் குமார் மற்றும் TASMAC அலுவலக இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், கடலூர் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர் திருவேங்கடம் என்பவருக்கு ரூபாய் ₹25,000/- லஞ்சமாக கொடுக்க முயன்றபோது கடலூர் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு (பொறுப்பு) டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.