நாடறிந்த சமூக ஆர்வலர் சிவ.இளங்கோ. ஆர்.டி.ஐ. மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலன் சார்ந்த விபரங்களை கேட்டுப்பெற்று அதை பொதுமைப் படுத்தியவர். சிவ.இளங்கோவின் வேகமான செயல்பாடு நல்லோர் சிலரைத் தவிர பலருக்கு எரிச்சலைத்தான் உண்டு பண்ணியது.
இந்நிலையில் 2015-ம் ஆண்டு சிவ.இளங்கோ மீது மாநில தகவல் ஆணையத்தால் தொடுக்கப்பட்ட வழக்கை எதிர்த்து 10 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தினார் சிவ.இளங்கோ. மொத்தம் 140 வாய்தாவில் அவரே சுயமாக வாதாடி (Party in person) 15/10/2024 நாளன்று வழக்கில் இருந்து விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். வழக்கில் உண்மைத் இருந்திருந்தால் சிவ.இளங்கோ விடுதலை ஆகியிருக்க வாய்ப்பு இல்லையே. நீதி வேண்டி 10 ஆண்டுகள் நடந்த சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை நண்பர்களுடன் சிவ.இளங்கோ பகிர்ந்து கொண்டார்.
ந.பா.சே.