S.I.R. சிறப்பு பணி| போராடும் சி.பி.எம்.|

கேரள மாநிலம், கண்ணூரில் வாக்குச்சாவடி அலுவலர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று (17.11.2025-) ஒருநாள், கேரளா முழுவதும் எஸ்.ஐ.ஆர். பணியைப் புறக்கணித்துள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆா். சிறப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வீடுகள் தோறும் விண்ணப்பங்களை வழங்கி அவற்றைப் பூா்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். (கேரளாவில் உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது)

இந்நிலையில்தான், வாக்குச்சாவடி அலுவலரான (B.L.O) பய்யனூா் அரசுப்பள்ளி ஊழியர் அனீஷ் ஜாா்ஜ், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப் பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கேரளாவில் வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று (17.11.2025-) மட்டும் எஸ்.ஐ.ஆர். பணியை அடையாளமாய்ப் புறக்கணித்துள்ளனர்.

“எஸ்.ஐ.ஆா். பணி அழுத்தம் காரணமாக, ஜாா்ஜ் பதற்றத்துடன் காணப்பட்டார்; இதுபோன்ற கடினமான பணிச்சுமையை இதுவரை அவா் கண்டதில்லை; மன அழுத்தம் தாளாமல்தான் இந்த முடிவை எடுத்துள்ளாா்” என்றும் அவரது தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜார்ஜ் மரணத்தையடுத்து, “உள்ளாட்சி தோ்தல் முடியும் வரை எஸ்.ஐ.ஆா். பணியை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று தோ்தல் ஆணையத்துக்கு சி.பி.எம். கோரிக்கை விடுத்துள்ளது. ஜார்ஜ் மறைவுச்சம்பவம் தொடா்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி, கண்ணூா் மாவட்ட ஆட்சியருக்கு; மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கா் உத்தரவிட்டுள்ளார்.

என்பியெஸ்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *