தீபாவளியை இப்படியும் கொண்டாடலாம்!

சென்னை ஞானதர்ஷன் சேவா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், பார்வை குறைபாடுள்ளோர் – அவர்களது குடும்பங்களுக்கு உதவிடும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

பார்வை குறைபாடுள்ள சமூகத்தை மேம்படுத்துவதும், அவர்கள் நிறைவான வாழ்க்கையை நடத்துதற்கு தேவையான உதவிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கும் பணியில் ஞானதர்ஷன் சேவா இறங்கியுள்ளது.

அந்த வகையில் 2024 தீபாவளி திருநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தீபாவளி கொண்டாட்டத்தை நடத்தினர்.

நிகழ்வில் 100 பார்வைகுறைபாடுள்ள சிறுவர்கள் (ம) 100 சிறுமிகள் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலோர் 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும் அவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவதை இங்கே குறிப்பிட்டு ஆகவேண்டும்.

அவர்களின் கல்விக்கான உபகரணங்கள் (64 ஜி.பி. மெமரி கார்டு உள்பட) இனிப்புகள், சுவையான தின்பண்டங்கள், புதிய ஆடைகள், கம்பளி போர்வைகள் இந்த விழாவின் போது வழங்கப் பட்டன.

“பார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு இந்த நிகழ்வை மறக்க முடியாததாக மாற்ற, நீங்கள் எங்களுடன் பிரதம விருந்தினர்களாகவும்; (பொதுமக்கள் -விஐபிகள்) கலந்துகொள்ளலாம். குழந்தைகளுடன் தருணங்களைப் பகிர்ந்துகொண்டு, இந்த நிகழ்வை வளப்படுத்த உங்கள் குடும்பங்களுடன் வருமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்” என்று ஞானதர்ஷன் சேவா அறக்கட்டளை யினர் விடுத்துள்ள அறிக்கையில் (முகவரி -தொடர்பு எண் அதில் உள்ளது. விரும்புவோர் உதவிடலாம்) சொல்லப் பட்டுள்ளது.

பார்வையாளராக நிகழ்ச்சியை காணச் சென்றிருந்த போது அங்கே சிறப்பு அழைப்பாளராக பாரம்பர்ய ஜோதிடர் “இமயமலை” லட்சுமிநாராயணனும் வந்திருந்தார். ‘இமயமலைக்குப் போய் திரும்பும் மன நிறைவை இங்கே காண்கிறேன்’ என்று அப்போது நம்மிடம் குறிப்பிட்டார் லட்சுமி நாராயணன்.

சேரான்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *