சென்னை திருவெற்றியூர் பகுதியில் செய்தியாளர் சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொண்டர்கள் மத்தியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சீமானுக்கு மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட்டது. பின்னர் சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பினார். காலை சிற்றுணவு எடுத்துக் கொள்ளாமல் நேரடியாக போராட்டக் களத்துக்கு வந்ததால் ஏற்பட்ட சிறு பாதிப்பு என்று நாம் தமிழர் தொண்டர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது! -சே –