திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சி பெரியார் நினைவு சமத்துவபுரத்திலுள்ள 92 வீடுகளில் நடந்துவரும் பழுதுபார்ப்பு பணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ரூ.65.97 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பழுதுபார்ப்பு பணிகளையும், ரூ15.46 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு வளர்ச்சி பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அ பொதுமக்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்ததோடு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.
ஆட்சியரோடு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மரு.என்.ஓ. சுகபுத்திரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கதனம் தங்கராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற் பொறியாளர்கள் சுமதி (உபகோட்டம்), யுவராஜ் (சாலை மற்றும் பாலங்கள்), உதவி பொறியாளர் தர்மேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
பொன்.கோ.முத்து