ரோபோடிக் மூலம் 500+ மூட்டுமாற்று சிகிச்சை|

சென்னை பிரசாந்த் மருத்துவமனை ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 500 + மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது!

சென்னையின் முன்னணி பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான பிரசாந்த் மருத்துவமனை, அதிநவீன நான்காம் தலைமுறை ரோபோட்டிக் உதவியுடன் 500 மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னையின் முதல் மருத்துவமனை என்ற பெயர் பெற்றுள்ளது. இந்தசாதனையை நிகழ்த்தியவர் இந்தியாவின் ஐந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் பட்டியலில் ஒருவரான மருத்துவர், எஸ் ஆறுமுகம்.

இதுகுறித்து அறுவை சிகிச்சை நிபுணர் எஸ். ஆறுமுகம் தெரிவிக்கையில்,
“60 வயதை தாண்டிய முதியவர்கள் மத்தியில் கீல்வாதம் குறிப்பாக முழங்கால்களில் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணங்கள். இந்த துல்லியமான சிகிச்சை முறையை எங்கள் பிரசாத் மருத்துவமனை அடைந்திருப்பது ஒரு மைல்கல் சாதனை. இந்த சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவதுடன் வேகமாக குணமடைந்து அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே நடக்கத் தொடங்கி ஒரு மாதகால அளவில் இயல்பான நடையினை மேற்கொள்ள முடியும்.என்பதே இந்தசிகிச்சையின் சிறப்பு” என மருத்துவர் ஆறுமுகம் தெரிவித்தார்.

பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில்:- “நான்காவது தலைமுறை வெலிஸ் ரோபோவை பயன்படுத்தி 500-க்கும் மேற்பட்ட ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெற்றிருக்கிறோம். மக்கள் விரைவாக குணமடைவதுடன், சிறந்த நீண்ட கால விளைவுகளையும் பெறுகின்றனர். இந்தியா முழுவதும் ரோபோடிக் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், எலும்பியல் சிகிச்சைக்கு வெலிஸ் மற்றும் மென்திசு அறுவை சிகிச்சைகளுக்கு எஸ்.எஸ்.ஐ. மந்திரா ஆகிய இரண்டு உத்திகளையும் ஒருங்கிணைப்பதில் பிரசாந்த் மருத்துவமனை முன்னோடியாக இருந்து வருகிறது. ஒரே மருத்துவமனையின் கீழ் பல்வேறு சிறப்புத் துறைகளில், ரோபோ சாதனத்தின் திறன்களை சிறப்பாக பயன்படுத்தும், தமிழ்நாட்டின் சில மருத்துவ மையங்களுள் ஒன்றாக நாங்கள் இதன்மூலம் புகழ் பெற்றிருக்கிறோம். உலகத்தரம் வாய்ந்த கண்டுபிடிப்புகளை சென்னை மாநகருக்கு கொண்டு வருவதன் வழியாக உலகத்தரத்திலான சிகிச்சையை இங்கு வழங்குவது எங்கள் நோக்கம். இந்த சாதனை, அதிநவீன சிகிச்சை பராமரிப்பின் மூலம் நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தி மாற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது” என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பயனாளிகள் மற்றும் 60 வயதை கடந்தவர்கள் எந்தவித ஊன்றுகோலும் இல்லாமல் சாதாரணமாக நடந்து வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சுகு

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *