ஆர்.கே.நகரில் மீண்டும் 20ரூபாய் நோட்டு…

சென்னை ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராகப் போட்டியிட, நா.மருது கணேஷ் மனுதாக்கல் செய்தார். அப்போது ஆர்.கே.நகர் தொகுதியின் கசப்பான 20 ரூபாய் நோட்டு சம்பவத்தை நினைவுகூரும் விதமாக 20 ரூபாய் நோட்டுகளாக 25 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்தார்.

சட்டமன்றத் தேர்தலில் (2026) திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் விருப்ப மனு அளித்து வருகிறார்கள் பொதுத் தொகுதிக்கு 25,000 ரூபாயும் தனித் தொகுதிக்கு 12,500 -ரூபாயும் கட்டணமாகப் பெறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் என். மருது கணேஷ் தனது ஆதரவாளர்களுடன் ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்தார் .

அப்போது விருப்பக் கட்டணத் தொகையான 25 ஆயிரம் ரூபாயை 20 ரூபாய் நோட்டுகளாக மாற்றி 1225 நோட்டுகளாக அறிவாலயத்தில் மருது கணேஷ் அளித்தார்.

“ஆர்.கே.நகர் தொகுதியில் மருது கணேஷ் போட்டியிட்டபோது, எதிர்த்து நின்ற டி.டி.வி. தினகரன், முத்திரை குத்தப்பட்ட 20 ரூபாய் நோட்டை தொகுதி மக்களிடம் கொடுத்து, நான் வெற்றி பெற்றதும் இந்த 20 ரூபாய் நோட்டை கொண்டு வந்து காட்டினால் ரூபாய் பத்தாயிரம் தருவதாக சொல்லி வாக்குறுதி அளித்து விட்டு வெற்றி பெற்றதும் தொகுதிக்கே வராமல் ஏமாற்றினார். அதை நினைவுறுத்தும் வகையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விண்ணப்ப கட்டணத் தொகையை 20 ரூபாய் நோட்டாக மருதுகணேஷ் செலுத்தினார்” என்று அங்கிருந்த ஆர்.கே.நகர் திமுகவினர் தெரிவித்தனர்.

பாலு

u

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *