கர்ப்பிணி வளைகாப்பு திட்டத்தில் ஊழல்!

கர்ப்பம் அல்லாத பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பில் வளைகாப்பு நடத்தப்பட்டதாக நிருபர் எழுப்பிய கேள்விக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சாலை பகுதியில் இயங்கி வரும் தனியார் விடுதியை சமூக நலத்துறை (ம) மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். தனியார் விடுதி, வகுப்பறை, சமையலறை உள்ளிட்ட இடங்களை அமைச்சர் கீதாஜீவன் அப்போது பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

“கஞ்சா போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்களை மீட்டெடுக்க சமூக நலத்துறை சார்பில் கடந்தாண்டு இரண்டு மையமும் நடப்பாண்டில் மூன்று மையமும் என ஐந்து 5 போதை தடுப்பு மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. போதைக்கு அடிமையாகும் மாணவர்கள், சிறார்களை இந்த மையங்கள் மூலம் மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமூக நலத்துறை சார்பில் குழந்தை திருமணம், போதை பொருட்களின் பயன்பாட்டால் வரும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான 24 மணி நேரம் செயல்படும் உதவி எண்கள் 1098, 181 ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் குறித்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் கல்வி பயில தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தாலிக்கு தங்கம் நிறுத்தப்பட்டதாக சொல்கிறீர்கள் … முன்னர், திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்தும் வழங்கப்படாமல் இருந்து வந்த திட்டம் மாற்றப்பட்டு தற்போது புதுமைப்பெண் என்ற திட்டமாக அது செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

பொன். கோ. முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *