
திருவள்ளூர் மாவட்டம் ,பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்த வல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது இங்குள்ள கோவில் உண்டியலில் கடந்த இரண்டு மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணி சரிபார்க்கும் பணி, இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மாதவன், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 753 ரூபாய் காணிக்கை பணம் கிடைத்தது. இதேபோன்று அங்குள்ள அருள்மிகு ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் உண்டியலில் காணிக்கை பணமாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 362 ரூபாய் என இரு கோவில்களிலும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 115 ரூபாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
P.K.M
