டிஜிபி சங்கர்ஜிவால்- கமிஷனர் ரத்தோர் ! -ஒரு பார்வை

சென்னை போலீஸ் கமிஷனரேட், ‘மெட்ரோ’ அந்தஸ்தை அடைந்த பின்னர் சத்தமில்லாமல் ஒரு விஷயம் அடிக்கடி நடக்கிறது. அது சென்னை மெட்ரோ போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருப்பவர், டிஜிபி 1-ஆக (காவல் தலைமை இயக்குநர்) பதவியில் அமர்வது!

சென்னை போலீஸ் கமிஷனரேட், மெட்ரோ ஆவதற்கு முன்னர் (திமுக ஆட்சி) அப்படி ஆனவர் லத்திகாசரண். மெட்ரோவுக்குப் பின்னர் கமிஷனர் டூ டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன், ஜே.கே.திரிபாதி போன்றோர் அப்படி ஆனவர்கள். பின்னர் ஒரு சிறு இடைவெளி. சென்னை மெட்ரோ போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இல்லாத சைலேந்திரபாபு, சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபி ஆகி முந்தைய தொடர்ச்சியை முறியடித்தார். இப்போது மீண்டும் முந்தைய தொடர்ச்சியாக சென்னை மெட்ரோ போலீஸ் கமிஷனர் டூ டிஜிபி-1 இடத்துக்கு சங்கர்ஜிவால் இன்று (30.06.2023) வந்திருக்கிறார். சற்றேர இரண்டரை ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பஞ்சாயத்தில் அதிகம் அடிபடாத பெயர் சங்கர்ஜிவால். ஆட்சியாளர்களின விசுவாசி என்கிற தாக்குதலில் அதிகம் காயம்பட்டவரும் இதே சங்கர் ஜிவாலாகத்தான் இருக்க முடியும். ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி நிலைகுலைய வைக்கக் கூடிய போராட்டங்கள், அடுத்தடுத்த ஆதாயக் (Murder for gain) கொலைகள் என இரண்டரை ஆண்டுகளில் அதாவது சங்கர்ஜிவால் காலகட்டத்தில் சென்னை, பெரிதாக டேமேஜ் ஆகவில்லை என்பதையும் பார்க்க வேண்டும். சென்னை போலீஸ் கமிஷனர் டூ தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி.யாக (30.06.2023) ஜூன் -30 ஆம் தேதி பொறுப்பேற்ற சங்கர்ஜிவாலின் சைலண்ட் சாதனைகள் சில உண்டு.
1990-பேட்ச் ஐபிஎஸ், சங்கர்ஜிவாலுக்கு பூர்விகம் உத்தரகாண்ட். எம்.இ., மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் பட்டதாரி. பெல், செயில் போன்ற நிறுவனங்களில் என்ஜீனியராக வேலைபார்த்துக் கொண்டே யுபிஎஸ்சி தேர்வெழுதி தமிழ்நாடு கேடரில் வெற்றி பெற்றவர். ஒட்டு மொத்த சர்வீசில் அதிக காலங்களை அயல் (மத்திய தொகுப்பு) பணியிலேயே (9ஆண்டுகள்) கழித்தவர். மாவட்டங்களில் போலீஸ் எஸ்.பி., டி.ஐ.ஜி, ஐ.ஜி, என்று வலம் வர வேண்டியவர், திடீரென தமிழ்நாடே வேணாம் என அயல்பணிக்கு திரும்பி பலரையும் வியக்க வைத்தார். பலவற்றிலும் ஒதுங்கிக் கொள்ளும் மிஸ்டர் க்ளீன் ஆபீசர்களுக்கே சற்றேர ஒன்பது ஆண்டுகள் அயல்பணிக்கு போகிற துணிச்சல் இருக்கும். அந்த துணிச்சல் சங்கர்ஜிவாலிடமும் இருந்தது. அயல்பணியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பினாலும் ‘நல்ல’ பொறுப்பு கோரி எங்கேயும் முட்டிக் கொண்டு நிற்காததால், உளவுப் பிரிவு பொறுப்பிலேயே பல ஆண்டுகளை கழித்தவர் ஜிவால்.

மன்னார்குடி சப் டிவிஷன் ஏஎஸ்பியாக காக்கி யூனிபார்மில் வாழ்க்கையை தொடங்கினாலும், பெரும்பாலும் சங்கர்ஜிவாலுக்கு சீருடை (யூனிபார்ம் சர்வீஸ்) அணியும் வாய்ப்பு அமைய வில்லை. அயலகப் பணியில், உளவுப் பணியில் என்று சர்வீசில் பாதிகாலம் யூனிபார்ம் இல்லாமலே இருந்தவருக்கு ஒருமுறை திருச்சி போலீஸ் கமிஷனர் ஆகும் வாய்ப்பும் கிடைத்தது. மத்திய தொகுப்பு (அயலகப் பணி) பணியில், குறிப்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இணை இயக்குநர் பொறுப்பில் சங்கர்ஜிவால் இருந்த போது, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை சிறப்பாய் கையாண்ட வகையில் இரண்டுமுறை குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றிருக்கிறார். டன் டன்னாக போதைப்பொருள்கள் அடிக்கடி கைப்பற்றப் பட்டதெல்லாம் அப்போதுதான் நடந்தது. சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர்ஜிவால் பணியாற்றிய காலகட்டத்திலும் போதை ஒழிப்புப் பணி விடாமல் தொடர்ந்தது. ‘இந்த வாரம் போதை ஒழிப்பு வாரம்’ என்பது போல வாரா வாரம் போதைப்பொருள் மீட்பில் சங்கர்ஜிவால் காட்டிய வேகம் அதிகம்.
அதே போல் சங்கர்ஜிவாலின் தனிப்பட்ட முயற்சியில், தனிப்பட்ட ஆர்வத்தில் விளைந்ததுதான்
“வானேவி” (ட்ரோன் மூலம் காவல் கண்காணிப்பு) போலீஸ் ஸ்டேசன். சென்னை பெசன்ட் நகரில் அருமையாக உருவாக்கப் பட்டிருக்கிறது வானேவி.
மொத்தம் ஒன்பது (9) ட்ரோன்கள், பொறியியல் ஞானவான்கள் என தெரிவு செய்யப்பட்ட 20 போலீசார் பொறுப்பில் விடப் பட்டிருக்கிறது. பத்துகிலோ மீட்டர் சுற்றளவில் எந்த பிரச்சினை என்றாலும் இருந்த இடத்தில் இருந்தபடி பட்டனை அழுத்தினால் போதும், ஆகாய மார்க்கமாக பறக்கும் ட்ரோன், மொத்த சம்பவத்தையும் படம் பிடித்துக் கொண்டு வருவதோடு, ‘ஆன் த ஸ்பாட்’ டில் இருந்தபடி போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவலை அனுப்பி சிக்கல் முடிச்சை அவிழ்க்க முடியும். கடல் அலையில் தவிப்போர், கடற்கரையில் கூடுவோர், சாலை விபத்துகள், திரள் போராட்டங்கள் இப்படி அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணிக்க வானேவி போலீசால் எளிதாய் முடியும். ‘வானேவி’ காவல்பணி என்பது இந்திய அளவில் முன்னோடி என்றே காவல் வட்டாரத்தில் சிலாகிக்கப் படுகிறது. இப்படியாக சென்னை மெட்ரோவை பாதுகாப்பு மிக்க அழகியலாய் ஆக்கி புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கையில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார், தமிழ்நாட்டின் புதிய போலீஸ் டிஜிபி சங்கர்ஜிவால்.👍

சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய்ரத்தோர், இன்று பொறுப்பேற்றுள்ளார். இதே நாளில் டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சங்கர்ஜிவால் வகித்து வந்த சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்புக்கு ரத்தோர் வந்துள்ளார்.

டிஜிபி அந்தஸ்தில் இருந்த சென்னை போலீஸ் கமிஷனர் இருக்கை, தற்போது கூடுதல் டிஜிபி அந்தஸ்துக்கு (டி- கிரேட்) குறைக்கப்பட்டு கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ரத்தோருக்கு அந்த கவுரவ இருக்கை ஒதுக்கப் பட்டிருக்கிறது. ரத்தோரை சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பில் அமர வைத்து அழகு பார்க்கவே சென்னை போலீஸ் கமிஷனரேட்டை டிஜிபி அந்தஸ்திலிருந்து ஏடிஜிபி நிலை (அந்தஸ்து) க்கு கொண்டு வந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆவடி மாநகரின் முதல் போலீஸ் கமிஷனர் என்ற அடையாளத்தோடு சென்னை மெட்ரோவில் நுழைந்துள்ளார் ரத்தோர். புறநகர்களில் இருக்கும் பயிற்சிப் பள்ளிபோல பெயரளவில், இருந்த ஆவடி ‘கமிஷனரேட்’ டை அட்டகாச சோலைவனமாக்கியவர் ரத்தோர். அரசாங்கமே பணம் ஒதுக்கி ஆள்களை வைத்து செதுக்கியிருந்தாலும், மொத்த பணியும் முடிய சில ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும். அதை மிகவும் குறைந்த காலகட்டத்தில் சிறப்பாக்கி கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் ரத்தோர். சென்னையில் சட்டம் ஒழுங்கு துணை மற்றும் இணை கமிஷனர் பொறுப்புகளை வகித்த ரத்தோருக்கு சென்னை புதிதல்ல. புன்னகை மாறாத அமுல்பேபி முகமும் டெக்னாலஜியில் தேர்ந்த ஞானமும் போலீஸ் வெல்ஃபர் (காவலர் நலன்) பேணுவதில் ஈகை குணமும் களைப்பில்லாத உழைப்பும் சந்தீப்ராய் ரத்தோரின் தனித்த இயல்பு. நட்பு பாராட்டுவதிலும்…

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *