ஜூன் 21- சர்வதேச யோகா தினம்! மைசூரு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு …

ஆளுநர் தமிழிசை பங்கேற்று பேச்சு

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் மொரார்ஜி தேசாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யோகாவும் இணைந்து, “100 நாட்கள், 100 நகரங்கள்” என்ற திட்டத்தின் கீழ், யோகா மேம்பாட்டை முன்னெடுத்துள்ளன. யோகாவின் சிறப்புப் பயன், கலாச்சாரம் குறித்தும், யோகாவை அடிமட்ட அளவில் மேம்படுத்தவும் 2022 ஜூன் 21 வரை நாடு முழுவதும் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு நிகழ்வுகளில் தேர்ச்சி பெற்ற 100 அமைப்புகள், ‘100 நாட்கள், 100 நகரங்கள்’ என்ற இலக்குடன், இதை கையிலெடுத்துள்ளன. 2022 ஜூன் 21ஆம் தேதி கர்நாடக மாநில மைசூருவில் நடைபெறும் சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்குகிறார். முன்னதாக இன்று (மே-27) தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ஐதராபாத் லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் 25- வது ஐ.டி.ஒய். கவுண்டவுன் நிகழ்ச்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவாலுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார். மத்திய கலாச்சாரம் (ம) சுற்றுலாத்துறை ஸ்பான்சர் (நன்கொடையாளர்) கிஸ்ஸான் ரெட்டி, ஆயுஸ் அமைச்சக இணை செயலாளர் மகேந்திர மஞ்சபாரா மோஸ் மற்றும் கவிதா கார்க், MDNIY இயக்குநர்- டாக்டர் ஈஸ்வர் பசவரெட்டி, புகழ்பெற்ற யோகா (பயிற்சியாளர்கள்) ஆசிரியர்கள் , திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரபலங்கள் நிகழ்வில் பங்கேற்றனர். ராதாராணி

விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்- மத்திய அமைச்சர் சர்பானந்தாசோனோவால்
Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *