திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் கட்சியின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் தொண்டர்கள் கட்சி கொடியினை ஏற்றி வைத்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மாவட்ட செயலாளர் வி.எம். பிரகாஷ் தலைமையில் தொண்டர்கள், கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம் எழுதுகோல் உள்ளிட்ட கல்விப் பொருட்களை வழங்கி தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.
ஏளாவூர் பகுதியில் 60 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சு.வை.ரவி, ஜெயராமன், கேசவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
P.K.M