பூத்கமிட்டி- திண்ணை பிரசாரம்! தேர்தலுக்கு பாமக ரெடி…

திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன் சத்திரத்தில் சோழவரம் வடக்கு ஒன்றிய பாமக பொதுக்குழு கூட்டம், ஒன்றிய செயலாளர் சந்தானம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வி.எம். பிரகாஷ் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.

“மாவட்டத்திலுள்ள தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை வேண்டும், நீர் நிலைகளை முறையாக தூர்வாரி பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என அப்போது வலியுறுத்தினார்.

கிளைகள் தோறும் பூத் கமிட்டி அமைப்பது, கிராமம் தோறும் சென்று கட்சி கொடி ஏற்றி வைத்து, மருத்துவர் அன்புமணி ராமதாஸின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க திண்ணை கூட்டம் நடத்துவது, உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேர்தலுக்கு தயார் நிலை….

கூட்டத்தில், மாவட்ட தலைவர் சு.வை. ரவி, இளைஞரணி செயலாளர் சுதாகர், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் டில்லிபாபு, வடக்கு ஒன்றிய தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *