தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பாண்டிச்சேரி, சென்னை புறநகர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இப்படியான தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பங்களாதேஷ், பர்மா, மியான்மர் நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் மனிதர்களை, இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக கவுகாத்தியில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் என்.ஐ.ஏ. சோதனை மேற்கொண்டது.
ஆட்களை கடத்தி சட்டவிரோதமாக தங்க வைத்தது தொடர்பாகவும், கடத்தி வர உடந்தையானவர்களை கண்டறிவதும் என்ஐஏ அதிகாரிகளின் சோதனையின் முக்கியப் பணியாக அமைந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கீழ் படப்பை பகுதியில் கிரௌன் ஜூஸ் பார்க் என்ற டீக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை திடீரென சோதனைக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக அங்கு தங்கி பணிபுரியும் நபரிடம், விசாரணை மேற்கொண்டனர்.
திரிபுராவை சேர்ந்த சகாபுதின் (28) என்ற அந்த நபரிடம் 30 நிமிடங்களுக்கு மேலாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பின்னர் அவரை கைது செய்து சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
‘பன்ச்’ பாலா