தொழில் முதலீட்டை ஈர்க்க அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடாலேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களுடனான சந்திப்பும் நிகழ்வில் உள்ளது.
சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வு மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பும் என சுற்றுப் பயண நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் சிங்கப்பூரை தொடர்ந்து ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ஜப்பான் -சிங்கப்பூர் நாடுகளில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அப்போது அழைப்பு விடுக்கிறார்.
நம்பி