
ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழா மற்றும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர், எடப்பாடியாரின் தீவிர பக்தர் டாக்டர் சுனில்.V தலைமையில், அவருடைய சென்னை தி.நகர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினர்களாக அதிமுக அவைத்தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் N.R.சிவபதி (மு.அமைச்சர்), அதிமுக அம்மா பேரவை இணைச்செயலாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் Ex MP, அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் ஷாநவாஸ், ஹாஜி டாக்டர் பஷீர் அகமது, டாக்டர். R.உமர் ஷெரீப், R.C.ஆறுமுகம், தி.நகர் P.பத்மநாபன், கார்டன் V.சுரேஷ்குமார், கராத்தே S.சேகர், S.M.S.ஜாகீர் உசேன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், இஸ்லாமிய பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை 141-வது வட்ட அதிமுக செயல்வீரர் M.A.முஸ்தபா ஏற்பாடு செய்திருந்தார்.