சென்னை மெரீனா கடற்கரையில் மேனாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான டி.ஜெயகுமார் அளித்த பேட்டி :
கழகம் சட்ட திட்ட விதிகளின்படி சரியான பாதையில் செல்லுகின்ற காரணத்தினால் ஒரு சிறப்பான, ஒரு நல்ல தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. கழக தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் கிடைத்துள்ளது. இதன் மூலம் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடியார் பொதுச்செயலாளராக வருவதற்கு எந்த தடையும் இல்லை. ‘மேல் முறையீடு’ தொடர்பாக எங்களின் சட்டக்குழு எதிர்கொள்ளும். இந்த தீர்ப்பு என்பது மகத்தான, வரவேற்கத் தகுந்த தீர்ப்பு. ஒவ்வொரு கழகத் தொண்டனும் இந்த தீர்ப்பை எழுச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டி.ஜெயகுமார் அளித்த பேட்டி :
கேள்வி : ‘மேல்முறையீடு குறித்து’…
இந்தியாவிற்கு இதயம் அரசமைப்பு சட்டம். கழகத்திற்கு இதயம் என்பது கழக விதி. அதன்படி நாங்கள் நடந்து கொள்வதால், எங்கள் பக்கம் நியாயம், நீதி ஆகியவற்றைக் கொண்டு சரியான பாதையில் செல்வதால் வெற்றி எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.
கேள்வி : பிரிந்து சென்றவர்கள் பற்றி ?
பதில் : கடிக்கும் மிருகங்களுடன்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால் நேற்று ஒன்று, இன்று ஒன்று என்று சொற்களை மாற்றிக் கொள்கின்ற அந்த நிறவெறிகளுடன் என்றைக்குமே வாழ முடியாது. அதுபோல ஓ.பன்னீர்செல்வம், தொண்டர்களாலும், மக்களாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சக்தி. எனவே அதனடிப்படையிலே அவரின் கருத்தை யாருமே பெரிய அளவிற்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
கேள்வி : ஓ,பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவில் இடம் உள்ளதா
பதில் : நீக்கப்பட்டவர்களை எப்படி சேர்த்துக் கொள்வது? எதிர்காலத்திலும் அவருக்கு அதிமுகவில் இடம் கிடையாது. எவ்வளவு பிரச்சனைகளைச் செய்துள்ளார், கழகத்தின் இதயதெய்வம் மாளிகையை இடித்தது, கருணாநிதியைத் துதிபாடியது, ஸ்டாலினுடன் உறவு வைத்துக் கொண்டு கட்சியைக் காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தது, திமுகவுக்கு பி-டீமாக செயல்படுவது, அவர் மகன் மட்டும் வெற்றிபெற்றால் போதும் என்று செயல்படுவது, கழக வேட்பாளரைத் தோல்வி அடையச் செய்தது, இதனை எல்லாம் தொண்டர்களும், பொதுமக்களும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?எதிர்காலத்திலும் அவரை சேர்த்துக் கொள்வது குறித்த பேச்சுக்கே இடமில்லை.
கேள்வி : பாராளுமன்ற தேர்தல் விரைவில் வருகிறது, பாஜகவுடன் கூட்டணி குறித்து…?
பதில் :
பாஜக கூட்டணியில் கீழ்மட்ட அளவில் சின்ன சின்ன உரசல்கள் இருந்தாலும் சரி, தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரையில் கழகம் அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் கழகத்தின் தலைமையிலான கூட்டணியிலே பாஜக அங்கம் வகிக்கிறது.
கேள்வி : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பாஜக அழைத்து வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா
அது ஒருபோதும் நடக்காது…
சேது –