மத்திய அரசுக்கு சொந்தமான சென்னை M.F.L. நிறுவனத்தில் நள்ளிரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் குதித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணம்?
போராட்டத்தில் குதித்துள்ள மத்திய அரசுத் தொழிலாளர்கள் தரப்பில் பேசினேன். “பணி ஓய்வு பெறும் நாளில் பணிக்கொடை உள்ளிட்ட சர்வீஸ் காலத்துக்கான அத்தனையையும் நிறுத்தி வைக்காமல் தொழிலாளிகள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்கிறது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். (படம்) அதை நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களே கடைபிடிக்கும் போது மிகவும் லாபத்தோடு இயங்கும் எங்களின் M.F.L. நிறுவனம் கடைபிடிக்காமல் அதை நிறுத்தி வைத்துள்ளது. இன்று ஓய்வுபெறும் மூன்று தொழிலாளிகள் தங்கள் வாழ்நாள் உழைப்புக்கு கிடைத்த மரியாதையை நினைத்து வேதனை அடைந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டம்” என்றனர்.
தொழிற்சங்கங்களும் தொழிலாளர் நலன் நாடுவோரும் முதலாளிகளின் அட்வான்ஸ் மே தின கொண்டாட்ட பரிசை (?!) கண்டிக்க முன்வர. வேண்டும்.
சேது