தமிழ்நாடு பாஜக தலைவர் திரு. அண்ணாமலையின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் மற்றும் அமைப்புகள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை அண்ணாமலையை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நியூஸ் 7தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதல் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பத்திரிகையாளர்கள், திருவாளர்கள் என். ராம், நக்கீரன்கோபால், திருஞானம், S.சீனிவாசன், A.S.பன்னீர் செல்வம், M.குணசேகரன், அசீப் அ.காமராஜ், சாவித்திரி கண்ணன், A.செல்வராஜ், ச. விமலேஷ்வரன், கவிதா முரளிதரன், பீர் முகமது, அரவிந்தாக்ஷன், தாமோதரன் பிரகாஷ், வ. மணிமாறன், ஏ.ஜெ.சகாயராஜ், செய்தி வாசிப்பாளர் சங்க தலைவர் பிரபுதாசன் உள்ளிட்ட பலரும் ஒன்றாக இணைந்து கண்டனக் குரல் எழுப்பியது கவனிக்கத்தக்கது. பத்திரிகையாளர் ஷ்யாம், தமது கண்டனத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்தது அங்கே வாசிக்கப்பட்டது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர் அமைப்புகள், பத்திரிகையாளர்கள் திருவள்ளூரில் பத்திரிகையாளர் நேசபிரபு மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு குடும்பத்துக்கு பத்திரிகையாளர் நலவாரியம் வாயிலாக சிறப்புநேர்வாக கருதி ரூபாய் 3 லட்சம் உதவிக்கு ஆணையிட்டு போலீஸ் அதிகாரிமீது முதற்கட்ட நடவடிக்கை எடுக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ந.பா.சேதுராமன்