ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனையோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவலூர் குப்பத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(41). கடந்த 19.11.2014 அன்று மதுபோதையில் தனது மனைவி மாரியம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்த புகாரில் அப்போதைய ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, வழக்கு பதிந்து குமரேசனை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர் இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி. டாக்டர் எம். சுதாகர் உத்தரவின்பேரில், இப்போதைய ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் திருமதி. செல்வி எஸ். சசிரேகா ஆகியோர் வழக்கில் தனிக்கவனம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று (07.11.2023), வழக்கின் வாதம் நிறைவடைந்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எம்.எழிலரசி, குமரேசனை குற்றவாளி என உறுதிசெய்து ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பான புலன் விசாரணை மேற்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்ற காவலர் அனைவரையும் போலீஸ் எஸ்.பி., டாக்டர் எம்.சுதாகர் பாராட்டினார்.
‘பன்ச்’ பாலா