நின்றிருந்த லாரி மீது சிலிண்டர் சுமை லாரி மோதல்!

பழுதாகி சாலையில் நின்ற சரக்குந்து (லோடு லாரி) மீது சமையல் எரிவாயு உருளைகளை (கியாஸ் சிலிண்டர்) ஏற்றி வந்த மற்றொரு சரக்குந்து மோதியதில், நிகழ்விடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி லாரி ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஹெச்.பி., சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையிலிருந்து, புதுவைக்கு சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிச்சென்ற சரக்குந்து; ஆத்தூரில் (சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை) பழுதாகி நின்றிருந்த சரக்குந்து மீது மோதியது. மோதிய அதே வேகத்தில் எரிவாயு உருளை ஏற்றி வந்த மற்றொரு சரக்குந்து மீதும் மோதி, சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி, எரிவாயு உருளை ஏற்றி வந்த சரக்குந்தின் ஓட்டுநர்; கடலூர் வேலாயுதம், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல் போலீசார்; விபத்தில் சிக்கிய வாகனங்களில் இருந்த எரிவாயு உருளைகளை, தீயணைப்பு வீரர்களின் உதவியோடு அப்புறப்படுத்தி; வேலாயுதம் உடலை மீட்டு; பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *