திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் எலுமிச்சை சாறுடன் சிலிக்கான் ஜெல் ஐஸ் கட்டியை கரைத்து குடித்ததால் பாதிப்புக்கு உள்ளாகி பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
‘சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்கள் வீடு திரும்பும் அளவில் நலமுடன் இருக்கிறார்கள், விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள்’ என்று குறிப்பிட்டார்.
மருத்துவ காப்பீடு மற்றும் இதர செலவுகள் தொடர்பான 15 லட்ச ரூபாய் முறைகேடு குறித்த கேள்விக்கு, ‘முறைகேடு என்று கூறாதீர்கள் அது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். அதேபோல் மருத்துவமனையில் இறந்தோரின் உடல்களை வைக்க போதுமான அளவு குளிர்சாதன பெட்டி கைவசம் இருக்கிறது’ என்று இன்னொரு கேள்விக்கும் பதிலளித்தார்.
பொன்.கோ.முத்து