‘பரட்டை’ களுக்கு முடிவு கட்டிய பள்ளி…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சிலர் ஒழுக்கக் குறைவான பரட்டைத் தலையுடன் வகுப்பறைக்குள் வந்து கொண்டிருந்தனர். பள்ளியின் ஆசிரியர்கள் பலமுறை அவர்களை அழைத்து ‘பரட்டைத்தலை’ பாலிஸியை கைவிடும்படி எச்சரித்தும் பலனில்லை. வேறு வழியின்றி பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு விஷயத்தை எடுத்துச் சொல்லினர். பின்னர் அவர்களின் ஒப்புதலோடு, மாணவர்களுக்கு சிகை அலங்காரம் (முடி திருத்தம்) செய்ய அதேபகுதியில் முடி திருத்தகம் நடத்தி வரும் நபரை வரவழைத்தனர். முடி திருத்தம் செய்ய வந்த அந்த நபரோ முகத்தை மறைக்கும் அளவிற்கு பெண்களைப் போன்ற நீண்ட கூந்தலுடன் வந்தார். அப்போது, மாணவர்கள், “முதலில் அவரை முடி வெட்டச் சொல்லுங்கள் என சொல்ல, ஆசிரியர்கள் உள்பட அனைவரும் நகைப்பில் மூழ்கினர். மாணவர்கள் வைத்த கேள்வியை எதிர்கொள்ள முடியாத சிகை அலங்கார நிபுணர், சிரித்தபடியே அவசர அவசரமாக கலைந்திருந்த தனது கூந்தலை அள்ளி நெகிழி வளைவு (ரப்பர் ஃபின்) மூலம் முடித்துக் கொண்டார்.

P.K.M.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *