ரவுடிகளை கண்காணிக்க துப்பாக்கி போலீசார்…

காஞ்சிபும் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கண்காணிக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்று சரக போலீஸ் டி.ஐ.ஜி. எம். சத்தியப் பிரியா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் துணையாக இருக்கும் கூட்டாளிகளை கண்காணிக்கும் பொருட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், நடமாடும் இடங்களிலும் ஆயுதம் ஏந்திய போலீசார், தினமும் ரோந்து செய்யும் வகையில், திறமையாக செயல்படக் கூடிய நன்கு பயிற்சி பெற்ற காவலர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பயிற்சி பெற்றவர்களுக்கான ரோந்து வாகனங்கள் வழங்கும் விழா மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. சரக போலீஸ் டிஐஜி, எம்.சத்திய பிரியா, போலீஸ் எஸ்.பி. டாக்டர் சுதாகர் ஆகியோர் கொடியசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பின்னர் டிஐஜி சத்தியபிரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: “காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த பத்து மாதத்தில் 400-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் தொடர்புகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ரோந்து வாகனத்தில் சுற்றும் காவலர்களுக்கு திறம்பட செயல்படும் வகையில் பயிற்சிகள் அளிக்கப் பட்டுள்ளதால் சரகத்திலுள்ள மாவட்டங்களில் குற்றங்கள் குறையும்” என தெரிவித்தார்.
துவக்க விழா நிகழ்ச்சியில் காஞ்சி கோட்ட. போலீஸ் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் டிஎஸ்பி சுனில் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

-சிவ. சுப்பிரமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *