சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் நடந்த பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மேனாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார், வீடு திரும்பும் வழியில் விபத்து சம்பவம் ஒன்றை புழல் பகுதியில் பார்த்துள்ளார்.
மூதாட்டி ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர், விபத்தில் சிக்கி பத்து நிமிடங்களுக்கும் மேலாக ஆம்பூலன்ஸ் ஏதும் வராமலும் எந்தவித உதவியும் பெறாத நிலையிலும் இருந்தனர்.
அப்போது டி.ஜெயகுமார், உடனடியாக ஆட்டோ ஒன்று ஏற்பாடு செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து டி.ஜெயகுமார் சமூக வலைதளத்தில், “அந்த சாலையில் சென்ற யாரும் மூதாட்டி காயமுற்று கிடப்பதை கண்டும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றதை பார்க்கும் போது மனிதம் மறந்து வருவதை நம்மால் உணர முடிந்தது. இன்று வேறொருவருக்கு என கடந்து போனால் நாளை நமக்கும் அதுதான்! இருப்போம் சற்று ஈரத்துடன், மருத்துவ உதவியே மகத்தான உதவி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
சே