பிரபல நிறுவனம் பெயரில் கலப்பட ஆயில்: 9 பேர் கைது !

போலிஆயில் தயாரிப்பு


திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் ‘அவலஞ்செ இம்பெக்ஸ்’ பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பிரபல நிறுவனம் ஒன்றின் பெயரில் போலியாக கலப்பட ஆயிலை தயாரித்து சந்தையில் புழக்கத்தில் விடுவதாக சோழவரம் போலீசாருகு தகவல் கிடைக்கவே குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயிலை போலியாக தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலியாக கலப்பட ஆயில் தயாரித்து புழக்கத்தில் விட்ட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் துளசி சிங் ராஜ் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி போலி ஆயில் நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.

பொன்கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *