மாணவர்களுக்கு உதவிடும் ‘காரணை’ பாஸ்கரன்…

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், தாழம்பூர் ஊராட்சி, காரணை 01-வது வார்டில் உள்ள ‘அட்வெண்ட் கிறிஸ்துவ துவக்கப்பள்ளி’யில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு அதிமுக செங்கல்பட்டு (கி) மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், திருப்போரூர் (வ) ஒன்றியச்செயலாளர்- தையூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.குமரவேல் ஆகியோரின் கருத்துருவில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தாழம்பூர் ஊராட்சி மன்ற 01வது வார்டு உறுப்பினரும் எதிர்கால ஊராட்சிமன்றத் தலைவர் பதவி வேட்பாளராக வலம் வரும்  டாக்டர் பா. மகாலட்சுமி பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியை கற்பகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் (வ) ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர்- சமூக சேவகர், டாக்டர் பா. மகாலட்சுமி கணவர்,  காரணை கே.பாஸ்கரன் கலந்து கொண்டு சொந்த செலவில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் மாணவர்களுக்கு ஸ்கூல்பேக் பேனா, நோட்டுபுத்தகம், கலர்பென்சில், பென்சில், ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கண்ணகி, கோபி, நான்சி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.


பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் மகாலட்சுமி பாஸ்கருக்கு மாணவர்கள் – பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பள்ளி ஆசிரியை விக்டோரியா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பிரீத்தி எஸ்.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *