செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனைப்படி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா (ம) திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் (வ) ஒன்றிய செயலாளர் எல்.இதயவர்மன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி மு.மயில்வாகனன், ஒன்றிய துணை செயலாளர் எல்.ஜெயபால், முட்டுக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் சங்கீதா மயில்வாகனன் வரவேற்றனர். ஒன்றிய துணைச்செயலாளர் வெண்பேடு ஏ.ரமேஷ், ஒன்றிய பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி ஏ.கருணகரன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சி.கோபிநாத், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் விஜி கோபிநாத், கிளை செயலாளர் மு.அசோகன் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்- முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் அனபழகன் சிறப்புரையாற்றினார்.
முட்டுக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.சி.அன்புசெழியன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆர்.கோவிந்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வீ.விஜயகுமார், திருப்போரூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் செ.எல்லப்பன் கானத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எட்டியப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பிரீத்தி எஸ்