திருப்போரூர் தொகுதி காஞ்சிபுரம் மாவட்டம்(வ), திருப்போரூர் (வ) ஒன்றியம் சார்பில்; முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் நடந்தது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருத்துருவில் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர்- திமுக ஒன்றிய செயலாளர் எல்.இதயவர்மன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் எல்.ஜெயபால், ஏ.ரமேஷ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர், வள்ளி எட்டியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக், நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இளைஞரணி துணை அமைப்பாளர் வீ.விஜயகுமார், திருப்போரூர் தொகுதி திமுக ஐ.டி.விங்க் ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் க.கௌரிசங்கர், படூர் ஊராட்சி மன்ற தலைவர், தாரா சுதாகர் (ம) துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
பிரீத்தி எஸ்.