
வடசென்னை மொழிப்போர் தியாகி, மேனாள் திமுக கவுன்சிலர் திருமதி. என். பார்வதி(எ) பார்வதி நாராயணசாமி உடல்நலக்குறைவால் நேற்று காலை காலமானார். அன்னாரது உடல் அடக்கம், சென்னை மூலக்கொத்தலம் இடுகாட்டில் இன்று பிற்பகல் 4 மணியளவில் நடக்கிறது.
வடசென்னை மாவட்ட திமுகவின் வழக்கறிஞர் அணி அமைப்பாளர், மேனாள் தினகரன் செய்தியாளர், சென்னை பெருநகர அரசு கூடுதல் வழக்கறிஞர் என்.மருதுகணேஷ், பார்வதி நாராயணசாமியின் மகனாவார்.
அன்னாரின் மறைவுச் செய்தியை அறிந்ததும் திமுக தலைவரும் தமிழ்நாடு அரசு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்ததோடு இரங்கல் செய்தியும் அனுப்பியுள்ளார்.
நீதியரசர் ப்ளோரா, திமுக மாவட்ட செயலாளர்கள், தா. இளைய அருணா, மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., கலாநிதி வீராசாமி எம்.பி., இரா. கிரிராஜன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபிநேசர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி, மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயகுமார், சென்னை மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், சிபிஐ வடசென்னை மூத்த நிர்வாகி எம்.எஸ். மூர்த்தி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துரைபாபு, வீரா.கே. தனபால், திமுக பகுதி செயலாளர்கள் இரா.லட்சுமணன், எஸ். ஜெபதாஸ் பாண்டியன், க.ஜெயராமன், அ.முருகன், இரா. செந்தில்குமார், மண்டலக் குழு தலைவர்கள், திருவொற்றியூர் தி.மு. தனியரசு, நேதாஜி யு. கணேசன், திமுக மூத்த நிர்வாகிகள், டி.கே.எஸ். இளங்கோவன், பி.டி.பாண்டிச் செல்வம், ஆர்.எம்.டி. ரவீந்திரன் மற்றும் பத்திரிகையாளர்கள், அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர். பத்திரிகையாளர்கள் டில்லிபாபு, பாலு மற்றும் திமுக வட்டச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் அன்னாரின் இறுதி ஊர்வல ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தனர்.
‘மெட்ராஸ்குரல்’ (Madraskural.com) இணையதளம் சார்பில் அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் அத்தனை உள்ளங்களுக்கும் எம் ஆறுதலும் தேறுதலும்…
ந.பா.சேதுராமன்- (ஆசிரியர்: மெட்ராஸ்குரல் இணையதளம்)
