அடுத்தடுத்த மாவட்ட கலெக்டர்களான தம்பதி !

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் புதிதாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக விஷ்ணுசந்திரனும், சிவகங்கை மாவட்ட கலெக்டராக
ஆஷா அஜித்தும் நியமிக்கப் பட்டுள்ளார்கள். இவர்கள் கணவன்-மனைவி ஆவர்.
தமிழ்நாட்டின் பக்கத்து பக்கத்து மாவட்டத்தை ஆட்சி செய்யும் பொறுப்பில் இருக்கும் தம்பதியர்க்கு பூர்விகம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆகும்.
இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. சிறு குழந்தையுடன் இந்த ஐஏஎஸ் தம்பதி இருப்பதால் பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் இவர்களை அரசு, பணியில் நியமித்துள்ளது. தேவகோட்டை சப்-கலெக்டராக ஆஷா அஜித்தும், பரமக்குடி சப்-கலெக்டராக விஷ்ணுசந்திரனும் தொடக்கத்தில் பணியாற்றினார்கள். நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக ஆஷா அஜித் பணியாற்றிய போது விஷ்ணுசந்திரன் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றினார்.
கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ஆஷா அஜித், “ நாங்கள் இருவருமே முதல் முறையாக கலெக்டர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோம். இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. எங்கள் பொறுப்பையும் அதிகமாக்கி இருக்கிறது. எங்களை போன்று பல தம்பதிகள் உயர் அதிகாரிகளாக பணி புரிகிறார்கள். குடும்பம் நடத்துவதை இருவரும் சிரமமாக கருதுவதில்லை. பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணிபுரிவதால் அவசர தேவைகளுக்கு
இருவரும் எளிதாக சந்தித்து கொள்ள முடியும். தமிழ்நாடு அரசு எங்களிடம் நம்பிக்கையோடு பொறுப்பை ஒப்படைத்துள்ளது. நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக பணியாற்றுவோம்” என கூறினார்.

பி.எஸ்.கே.பாரதி

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *