காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சரின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ விளக்கப் பொதுக் கூட்டம் திருப்போரூர் ரவுண்டானா அருகில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். ஓராண்டில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு பேசினர்.
கூட்டத்தில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், “கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கிடந்தவர்களை நேரில் போய் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்ட ஒரே தலைவர், உலகத்திலேயே ஒருவர் உண்டென்றால், அவர் மு.க.ஸ்டாலின் ஒருவர் மட்டும் தான்” என்று குறிப்பிட்டார். கூட்டத்தில், ஒன்றிய பெருந்தலைவர் – மேனாள் எம்.எல்.ஏ., எல். இதயவர்மன் தலைமை தாங்கினார். திருப்போரூர் பேரூராட்சி மன்றத் தலைவர் – பேரூர் செயலாளர் எம்.தேவராஜ் முன்னிலை வகித்தார். திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் எம்.சேகர் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர், வீ.தமிழ்மணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி.சி.அன்புசெழியன் மாமல்லபுரம் வெ.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். பிரீத்தி எஸ்.