திருவள்ளூரில் சுதந்திரநாள் கொண்டாட்டம்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று (15.08.2023) சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வேளாண்மை துறை சார்பில் மூன்று பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில், ரூ10.54 இலட்சம் மதிப்பு வேளாண் இடுபொருட்களும், தாட்கோ சார்பாக ஐந்து பயனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்காக மானிய அடிப்படையில் ரூ 31.10 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும்; மீன்வளத்துறை சார்பாக ஐந்து பயனாளிகளுக்கு மீன் மற்றும் கருவாடு வியாபாரம் செய்வதற்காக தலா ரூ 1.25 இலட்சம் வீதம் ரூ 6.25 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும் வழங்கினார்.

அதே போல் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு தலா ரூ 25 ஆயிரம் வீதம் ரூ 50 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையும், மாவட்டத் தொழில் மையம் சார்பாக ஐந்து பயனாளிகளுக்கு சுயதொழில் புரிய மானிய அடிப்படையில் ரூ10 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும்; தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக, சுய தொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஐந்து பயனாளிகளுக்கு ரூ.3‌ கோடி மதிப்பிலான கடன் உதவிகளும்;
வருவாய்த்துறை சார்பாக 4 இருளர் இன மக்களுக்கு ரூ1.18 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களும் என; மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ 3.59 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்.

இவ்விழாவில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.பா.சீபாஸ் கல்யாண் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர், சு.அசோகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மரு.என்.ஒ.சுகபுத்ரா இ.ஆ.ப., ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ் இ.ஆ.ப., சார் ஆட்சியர் (பொன்னேரி) செல்வி.ஐஸ்வர்யா ராமநாதன் இ.ஆ.ப., மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மு.மீனாட்சி, அரிக்குமார், திருவள்ளூர் உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப., உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) சிபின் இ.கா.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சுபலட்சுமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *