
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து வரும் கே. அண்ணாமலை அவர்கள், தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மத்திய அமைச்சரவை நாற்காலியில் அமர்கிறார் என்ற தகவல் சில நாள்களாக பெருமளவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பாஜக மற்றும் தேசிய பாஜக செய்திகளை அலசும் ஊடகர்கள், கட்சியில் நல்ல தொடர்பு உள்ளவர்கள் என நாலாபுறமும் இதுகுறித்து பேசிப் பார்த்து விட்டோம். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் 2026 -வரையிலும் அதற்கான வாய்ப்பு துளியும் இல்லை என்றே பதில் கிடைக்கிறது.
“தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பிறகு தினமும் ஒரு அறிக்கை, தினமும் ஒரு பேட்டி என்று கட்சி கலகலவென போய்க் கொண்டிருக்கிறது, அதை கட்சி மேலிடம் மிகவும் விரும்புவதால் இப்போதைக்கு அண்ணாமலை இங்கேதான் இருப்பார்” என்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவுக்கு மாவட்டத் தலைவர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. ஏ.பி.முருகானந்தம், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா மற்றும் மேனாள் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போன்றோர் பெயர்கள், பாஜக மாநிலத் தலைவர் பட்டியலில் இருந்தது கவனிக்கத் தக்கது.
தமிழ்நாடு பாஜக மாவட்டத் தலைவர்கள் பட்டியல் இதோ:
கரூர் – செந்தில் நாதன், சேலம் மேற்கு – ஹரிராமன், தர்மபுரி – சரவணன், திருப்பூர்வடக்கு கே.சி.எம்.பி. சீனிவாசன், திருவண்ணாமலை வடக்கு – கவிதா,
திண்டுக்கல் மேற்கு – டி.ஜெயராமன்,
இராணிப்பேட்டை – நெமிலி ஆனந்தன்,
புதுக்கோட்டை மேற்கு – ராமச்சந்திரன்,
கிருஷ்ணகிரி மேற்கு – நாராயணன்,
திருப்பூர் தெற்கு – மோகனப்பிரியா,
ஈரோடு வடக்கு – எஸ்.எம். செந்தில்,
ஈரோடு தெற்கு – செந்தில், நாகப்பட்டினம் – விஜயேந்திரன், சேலம் கிழக்கு – சண்முகநாதன், பெரம்பலூர் – முத்தமிழ் செல்வன், விருதுநகர் மேற்கு – சரவண துரை ராஜா.
பாரதி
