பாஜக தலைவரை கண்டித்து ‘சென்னை பிரஸ் கிளப்’ ஆர்ப்பாட்டம்!

பிரஸ்கிளப் தலைவர் எ.செல்வராஜ், செயலாளர் ச.விமலேஷ்வரன் மற்றும் நிர்வாகிகள் பிற அமைப்பினர்…

சென்னை பத்திரிகையாளர் மன்றம் (சென்னை பிரஸ் கிளப்) மற்றும் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளின் சார்பில் நேற்று, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊடகங்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் பட்டது. திங்கட்கிழமை (30.05.2022) மாலை, சென்னை பத்திரிகையாளர் மன்றம் அமைந்துள்ள சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் பல்வேறு கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத் தலைவர் அ.செல்வராஜ் தலைமை தாங்கினார்.
செயலாளர் ச.விமலேஷ்வரன் துவக்க உரையாற்றினார். மன்றத்தின் நிர்வாகிகள் ஹமீது, ராஜன்பாபு, மோனீஷ்வரன், வினோத் கண்ணன், மூத்த பத்திரிகையாளரும் சென்னை பிரஸ் கிளப் ஆலோசகருமான சிந்து பாஸ்கர் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோரும் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களும் மற்றும் இளம் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் சர்வதேச மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சுவாமி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் கடந்தகால வரலாற்றை எடுத்துக்கூறி சிறப்புரையை நிறைவு செய்தார். பாஜக தலைவர் அண்ணாமலையின், பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் செயல், கருத்துரிமைக்கு எதிரான போக்கு ஆகியவற்றை கண்டித்தும் அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பேசினர். ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *