சென்னை புழல் – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் வங்கி ஒன்றின் தானியங்கி (A.T.M.) ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அதிகாலை வேளையில் அந்த பணம் எடுக்கும் ஏ.டி.எம். திடீரென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். இருப்பினும் காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவி அருகிருந்த உணவகமும் முழுதாய் எரிந்தே போனது. தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து 2 மணி நேர போராட்டத்தின் பின் தீயை நிறுத்தினர். இந்த தீ விபத்தில் உணவகத்தில் இருந்த லட்ச ரூபாய்க்கும் மேலான மளிகை பொருட்களோடு மின்சாதன பொருட்களும் கருகின.
பணம் எடுக்கும் தானியங்கியில் இருந்த இயந்திரத்தில் வைக்கப்பட்ட பண விவரம் குறித்து சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் கணக்கெடுப்பிற்கு பின்னரே தெரியவரும் என்று சொல்லப் பட்டுள்ளது. தீ விபத்து தொடர்பாக புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை முயற்சி காரணமா அல்லது மின்கசிவுதான் விபத்தின் பின்னணியா என்ற பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.
ஏற்கெனவே 9ஆயிரம் கோடி ரூபாய் ஒரு தனிமனிதர் அக்கவுண்டுக்கு சிங்கிள் பேமண்ட் ஆக கொடுத்த வங்கியின் சாதனை மறைவதற்குள் இன்னொரு வங்கி 753 கோடி ரூபாயை கொடுத்து மிரட்டி இருப்பது கண்முன்னே வந்து போகிறது.
P.K.M