அதிரடியில் ஆவடி போலீஸ் கமிஷனர்…

சென்னை புறநகரில் கொலை-கொள்ளை- வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவில் துணை கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உதவி கமிஷனர் குமரேசன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாதன், ராஜ்குமார் மற்றும் 40 போலீசார் செங்குன்றம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

வீதி வீதியாக பழைய குற்றவாளிகளின் வீடுதேடிச் சென்று சோதனை மேற்கொண்டனர். குற்றவாளிகளின் உறவினர்களிடம், குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு துணை போவது, அடைக்கலம் கொடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது போலீசார் எச்சரித்தனர். சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.

PKM

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *