படுக்கை தோஷத்துக்கு என்னதான் பரிகாரம்?

(தொடர் பதிவு -7)

கிரக கதிர் வீச்சும்- வீடு(பாவம்)களும்…(மறைவு ஸ்தானங்கள்)
வான் வெளியை 360 பாகை களாக பிரித்துக் கொண்டு அதனை 12 ராசி கட்டங்களாகவும் ஏதேனும் ஒரு கட்டத்தை லக்னமாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது லக்னத்தில் இருந்து 3 ம் வீடு எனப்படுவது, 60 பாகை முதல் 90 பாகை வரை; அதாவது இந்த பாகை , 360 பாகையை கொண்ட ஒரு வட்டத்தில் கால் பங்கு ஆகும்.

6 ம் வீடு எனப்படுவது 150 பாகை முதல் 180 பாகை வரை ஆகும். இது 360 பாகையை கொண்ட ஒரு வட்டத்தில் அரை பங்கு ஆகும். 8 ம்வீடு என்பது 210 பாகை முதல் 240 பாகை வரை! இது 360 பாகையை கொண்ட ஒரு வட்டத்தில் முக்கால் பங்கு ஆகும். 12 ம் வீடு என்பது 330 முதல் 360 பாகை ஆகும், இது 360 பாகையை கொண்ட ஒரு வட்டத்தில் முழு பங்கு ஆகும். எனவே ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அது 360 பாகை என கொண்டால், லக்னத்தில் இருந்து மறைவு ஸ்தானங்கள் எனப்படும் 3,6,8,12 ம் வீடுகள் முறையே கால், அரை, முக்கால், முழு என உள்ள வீடுகளை குறிக்கிறது. ஒரு கிரகத்தில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் நேராக, 360 பாகை உள்ள வட்டத்திற்குள் வரும் போது அவை 90, 180, 240, 360 பாகைகளுக்குள் விழும்போது; அதன் ஆங்கிள் கால், அரை, முக்கால் , முழு ஆகிய ராசிகளில் (வீடு) படும்போது; அது ஜாதகரின் உடல் மற்றும் மன நிலையில மாற்றம் ஏற்படுத்தும் என்பது தெரிகிறது. இந்த பாதிப்பு ஜாதகருக்கு மற்ற ஆங்கிள்களில் இருந்து படும் கதிர் வீச்சை விட கூடுதலான பாதிப்பு இருக்கும் என்பதால், இதனை மறைவு ஸ்தானம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மறைவு ஸ்தானங்களில் உள்ள கிரகங்களில் இருந்து வெளிப்படும் கதிரவீச்சை, இதே போன்று கணக்கிட்டால் அதுவும் கால், அரை, முக்கால், முழு என்ற அளவில்தான் இருக்கும். அதனால் தான் இந்த மறைவு ஸ்தானங்கள், இதில் இருக்கும் கிரகங்களால்; அதன் தசா புத்திகளில் ஜாதகருக்கு கிடைக்கும் பலன்கள் குறைவு என்று; ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்யும்போது, அதன் மூலம் பெறப்படும் கூடுதல் கதிர்வீச்சு; ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு பலத்தை தரும் என்பதால்; கிரகத்திற்கு உரிய பரிகாரங்களை செய்யும்படி கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக தோஷங்கள் என்று ஜாதகங்களில் குறிப்பிடப்படுகின்றன.
அவை, சூரிய சுக்கிர தோஷம், குரு, சுக்கிர தோஷம், கேது சுக்கிர தோஷம், செவ்வாய் தோஷம், நாக (ராகு,கேது) தோஷம் எனப்படுகின்றன.

7 ம் வீட்டில் (180-210 பாகை) பாப கிரகங்கள் எனப்படும் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இருந்தால் களத்திர தோஷம், இதே கிரகங்கள் 12 ம் வீட்டில் இருந்தால் படுக்கை தோஷம் என்றும், கூறப்படுகிறது. இதுவும் மேற்கூறியபடி கிரக கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளே. இதில் இரண்டு கிரகங்கள் சேரும் போது அவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் சேர்க்கை தரும் பலன்களை வைத்து தோஷம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என எடுத்துக்கொள்ள வேண்டும். ராகு- கேதுக்கள் கிரகங்கள் இல்லா விட்டாலும் அது வெட்டுப்புள்ளிகளாக இருந்தாலும் அந்த புள்ளிகள் வழியாக ஊடுருவி வரும் மற்ற கிரகங்களின் கதிர் வீச்சு தோஷத்தை தருவதாக கூறப்படுகிறது இந்த கிரகங்களின் பாதிப்புக்கு அந்த கிரகங்களுக்கு செய்யும் பரிகாரங்களை தவிர, ரத்தின கற்கள் அணியும் முறையும் பரிகாரமாக கூறப்பட்டுள்ளது; அதனை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
(வாசகர்கள் தங்களது சந்தேகங்கள், கருத்துக்களை பதிவு செய்யவும்…)

கட்டுரையாளர்: ஜோதிட ரத்னா, பஞ்சாங்க கணிதமணி, பூம்புகார் ஜி.ஸ்ரீனிவாசன் M.A (Astrology) தொடர்புக்கு: வாட்சப் எண்: 9499902400 – கைபேசி > 9080082200-

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *