ஜாதகம் கணிப்பதில் நேரத்தின் முக்கியம். ஒருவரது பிறந்த நேரத்தைக் கொண்டு ஜாகம் கணித்து பலன் கூறப்படுகிறது. ஜாதகம் கணிப்பதில் குழந்தை பிறந்த நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதாவது குழந்தை பிறந்த நேரம் இந்திய நேரப்படி (INDIAN STANDARD TIME) காலை 6 மணி 10 நிமிடம் என எடுத்துக்கொள்வோம், அந்த குழந்தை மும்பையில் பிறந்து இருந்தால் ஒரு நேரமும் கொல்கத்தாவில் பிறந்து இருந்தால் வேறு ஒரு நேரமும் வரும். இதைத்தான் உள்ளூர் மணி (LOCAL MEAN TIME) என்று கூறுவார்கள்.
இந்திய நேரம் என்றால் என்ன ?
பூமியின் வட துருவத்தையும், தென் துருவத்தையும் இணைக்கும் கற்பனைக்கோடுகள் தீர்க்க ரேகை ( LONGITUDE) ஆகும். பூமி கற்பனையாக 360 ̊ (பாகை) களாக பிரிக்கப்பட்டுள்ளது. தீர்க்க ரேகையின் 0 (பூஜ்ய) பாகையில் இங்கிலாந்தின் கிரீன்விச் நகரம் அமைந்துள்ளது. இதனை கொண்டு கிழக்கே 180 ̊ (பாகையும்) மேற்கே 180 ̊ (பாகை) யாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. உலகின் உள்ள அனைத்து நாடுகளின் பொதுமணி 0 (பூஜ்ய) பாகை தீர்க்க ரேகை முதல் அந்த அந்த நாடுகளின் தீர்க்க ரேகை வரை உள்ள வித்தியாசத்தை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகின்றன.
இந்தியாவில் 82 ̊ (பாகை) 30 ̇ (கலை) அமைந்துள்ள உஜ்ஜையினையை (அலகாபாத்) மைய ஸ்தலமாக கொண்டுள்ளோம். 360 பாகை கொண்ட பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. எனவே 24 X 60 = 1440 நிமிடம். எனவே ஒரு பாகை சுற்ற 1440 / 360 = 4 நிமிடங்கள். 1 பாகைக்கு 4 நிமிடங்கள் என்றால் 82 ̊ (பாகை) 30 ̇ (கலை) அமைந்துள்ள இந்தியாவின் மைய ஸ்தலத்திற்கு 84.30 X 4 = 330 நிமிடம் அதாவது 5 மணி 30 நிமிடம். இது தான் இந்தியாவிற்கும் கிரீன் விச்சிற்கும் உள்ள நேர வித்தியாசம் ஆகும்.
இந்தியா தீர்க்க ரேகை 68 பாகை முதல் தீர்க்க ரேகை 97 பாகை வரை பரவியுள்ளது. அதாவது 97 – 68 = 29 பாகைவரை பரவியுள்ளது. 29பாகைக்கு வித்தியாசம் 29 X 4 நிமிடம் = 116 நிமிடம் அதாவது 1 மணி நேரம் 56 நிமிடம் வித்தியாசம். 97 பாகையில் உள்ள ஊரில் ஆகும் மணிக்கும் 68 பாகையில் இருக்கும் ஊரின் மணிக்கும் வித்தியாசம் 1 மணி நேரம் 56 நிமிடம். அதாவது மும்பை மணிக்கும் கொல்கத்தா மணிக்கும் 1மணி நேரம் 56 நிமிடம் வித்தியாசம் வரும். இது பல குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் இந்தியாவின் மைய ஸ்தலமான உஜ்ஜையினியில்(தற்போதைய பெயர் அலகாபாத்) ஆகும் நேரத்தையே இந்தியா முழுவதும் உள்ள பொது மணியாக (STANDARD TIME) கடைபிடிக்கப்படுகிறது.
உள்ளூர் மணி என்பது மையஸ்தலம் அமைந்துள்ள தீர்க்க ரேகைக்கும் குழந்தை பிறந்த ஊரின் தீர்க்க ரேகைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டு பிடித்து ஒரு பாகைக்கு 4 நிமிடம் வீதம் கணக்கிட்டு, குழந்தை பிறந்த ஊர் மைய ஸ்தலத்திற்கு மேற்கே இருந்தால் பொது மணியில் இருந்து கழிக்க வேண்டும். கிழக்காக இருந்தால் கூட்ட வேண்டும். இந்திய மையஸ்தலம் தீர்க் ரேகை 82 பாகை 30 கலை சென்னை தீர்க்க ரேகை 80 பாகை 17 கலை
வித்தியாசம் 2 பாகை 13 கலை
சென்னை மைய ஸ்தலத்தில் இருந்து மேற்கே உள்ளது. அதனால் 2.13 X 4 = 8 நிமிடம் 52 நொடி என்பதை இந்திய பொது மணியில் இருந்து கழிக்க வேண்டும். உஜ்ஜையினியில் காலை 10 மணி என வைத்துக்கொண்டால் சென்னையில் மணி 9 மணி 51 நிமிடம் 08 நொடி ஆகும். அதாவது இந்திய பொதுமணி காலை 10 மணி என்றால் சென்னை உள்ளூர் மணி 9 மணி 51 நிமிடம் 08 நொடி ஆகும்.
ஜாதகம் கணிக்கும் போது இந்த உள்ளூர் மணியை வைத்து தான் பிறந்த நேரத்தை கணக்கிட்டு ஜாதகம் கணிக்க வேண்டும். அது தான் துல்லியமான லக்னத்தை தரும். லக்னம் சரியாக இருந்தால் தான் பாவங்களும் சரியாக கணக்கிட்டு துல்லியமாக பலன் கூற முடியும்.
ஜோதிடரத்னா, பஞ்சாங்க கணிதமணி, பூம்புகார் ஜி.ஸ்ரீனிவாசன்
(தொடர்புக்கு : 90800 82200 – வாட்சப்: 94999 02400)