கோயிலில் சூடம் ஏற்றிய பெண்ணின் சேலையில் தீ பிடித்து சாவு…

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் வரலட்சுமி. தீவிர அம்மன் பக்தை. கடந்த 26.05.2023. அன்று, அதே பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

அப்போது, வாங்கிச் சென்ற கற்பூரத்தை ஏற்றி அம்மனுக்கு ஆராதனை காட்ட கற்பூரம் ஏற்றிய போது, எதிர்பாராத விதமாக வரலட்சுமி சேலையில் தீ பற்றியது. சேலையில் பிடித்த தீ, வேகமாக உடல் முழுவதும் பரவவே எரிச்சலில் கத்தி கூப்பாடு போட்டார். வரலட்சுமி அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்த போதும் வரலட்சுமி பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவம் குறித்து ஆரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வரலட்சுமி உயிரிழந்தார். தீவிர அம்பாள் பெண் பக்தரொருவர் அம்பாள் கோயிலில் சூடம் ஏற்றிய போதே தீ விபத்தில் சிக்கி இறந்தது, அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன். கோ. முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *