என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம், காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவன விரிவாக்கத்திற்காக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி காவல் துறையினரை ஏவிவிட்டு சட்ட விரோதமாக விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அழித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை காவல்துறையினர் பலவந்தமாக கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வி.எம். பிரகாஷ் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சு.வை. ரவி உள்ளிட்ட ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டனர்.
பொன். கோ. முத்து