செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், நான்கு தலைமுறையாக வாழும் விவசாய குடும்பத்துக்கு பட்டா வழங்கலை உறுதிப்படுத்தி நீதியை நிலைநாட்டித் தரும்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணிச் செயலாளரான சிறுத்தை வீ. கிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள விபரம் :
செங்கல்பட்டு மாவட்டம். திருப்போரூர் வட்டம் நெ 48, பெரிய வெப்பேடு கிராம வி.சி.க பிரமுகரான கோ.தேவேந்திரன் த/பெ கோபால் என்பவர் கடந்த 4 தலைமுறைகளாக 3/1 -ல் 0.35 சென்ட் விவசாய நிலத்தை 60 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வசித்து – வாழ்ந்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்து 8912/2021-பட்டா வழங்கக்கோரி உத்தரவும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து 8. -01.2022-ல் பட்டா வழங்ககோரி விண்ணப்பித்தும் உள்ளார். புல எண்: 3/1ல் மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு பகுதியை கிராம நத்தமாக நிலவகைப்பாடு செய்து 14 நபர்களுக்கு பட்டா வழங்கியும் அதில் 50 குடும்பங்கள் வீடு கட்டியும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புல எண்: 3-ல் உட்பிரிவு 13க்கு பட்டா வழங்கி அனுபவித்து வரும்போது, 14க்கு உட்பட்ட கோ. தேவேந்திரன் அவர்களுக்கு பட்டா வழங்காது இருப்பது ஒரு தலைப்பட்சமானது மட்டுமின்றி சாதிய மனப்பான்மையோடு செயல்படுவதாகவே கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் இந்நிலம் சம்மந்தமான ஆவணங்களை பெரிய வெப்பேடு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பையனூர் வருவாய் ஆய்வாளர், திருப்போரூர் வட்டாட்சியர், கோட்டாட்சியர் உட்பட அனைவரும் அதே மனப்பான்மையோடு 4 தலைமுறையாக வசித்து வரும் விவசாய நிலத்தை விட்டு காலி செய்ய தொடர்ந்து வற்புறுத்தியும் நோட்டீஸ் அனுப்பியும், கோ. தேவேந்திரன் குடும்பத்தாரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குவதை கைவிட வேண்டியது அவசியம்!
செங்கற்பட்டு மாவட்த்தில் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டு அரசுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்பு, தங்குமிடத்துடன் உணவு வசதியுடனும் கூடிய விடுதிகள், கல்லூரிகள் என சொல்லிக்கொண்டே போகும் வகையில் உள்ள இடங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், கோ.தேவேந்திரன் மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகள் விதவை சகோதரி ஆகியோர் இந்த விவசாய நிலத்தை நம்பி நான்கு தலைமுறையாக ஜீவனம் செய்துவரும் நிலத்திற்க்கு பட்டா வழங்கிட வழிவகை செய்யும் மாறும் கேட்டுக்கொள்கிறோம்.
9.05.2022. நாளன்று 10.30 மணியளவில் கடைசி கட்டமாக செங்கப்பட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து தடா.கோ.தமிழினியன் (எ) கோ.தேவந்திரன் அவர்களுக்கு பட்டா வழங்கல் கோரி மனு வழங்கினோம்.
கோ. தேவேந்திரன் ஒருங்கிணைப்பில், மாநில தொண்டரணி செயலாளர் சிறுத்தை வீ.கிட்டு வாகிய நானும், மண்டல செயலாளரான சூ.க.விடுதலை செழியன் மற்றும் மாநில தொழிலாளர். செயலாளர் வ.கனல் விழி. மாநில தொண்டரணி துணைச்செயலாளர் வ.டில்லிபாபு, எல். உ. வழக்கறிஞர் உதயக்குமார், மாநில வழக்கறிஞர் துணைச் செயலாளர், மாவட்ட அமைப்பாளர் மோ.அக்கினியன், கோவளம் பாபு மற்றும் 100க்கும் மேலான வி.சி.க. இயக்கத் தோழர்கள் உடன் இருந்தனர்.
நிலமீட்பு என்பது போராட்ட வடிவத்தில்தான் மீட்டெடுக்க முடியும். மனு என்பது நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் எனவே, அனைத்து தோழர்களும் இணைந்து நிலத்தினை போராட்ட வழியில் மீட்டெடுப்போம் என்பதை அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரீத்தி எஸ்.