கொதிகலன் பழுது! பாதிப்பில் மின் உற்பத்தி…

கொதிகலன் குழாய் பழுது! பாதிப்பில் மின் உற்பத்தி… சென்னை புறநகரான அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால் உற்பத்தி சரிந்து வரும் நிலையில் அடிக்கடி ஏற்படும் இதுபோன்ற பழுதுகளால் மின்வாரிய அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் உள்ள 5 அலகுகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என நாள் ஒன்றுக்கு மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக தற்போது அங்கு 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே நிலக்கரி பற்றாக்குறையால்‌ தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி சரிந்து வரும் சூழலில், இது போன்ற கொதிகலன் குழாயில் உண்டாகும் பாதிப்பால்; மின் உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது…

– தேனீஸ்வரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *