தமிழ்நாடு காவல்துறையில் 01/01/2022 முதல் 30/04/2022 – வரையில் 100 போலீசார் இறந்துள்ளனர்.
ஜனவரி- 26, பிப்ரவரி -30, மார்ச் – 22, ஏப்ரல் -22 – என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இறப்பின் காரணங்களைப் பார்க்கும் போது வேதனை அதிகமாகிறது. உடல்நலக் குறைவு, மாரடைப்பு மற்றும் தற்கொலை ஆகியவற்றால் மட்டுமே நூறில் 73 பேர் உயிரை இழந்துள்ளனர். இறப்பின் காரணங்களை இங்கே தனித்தனியே பார்க்கலாம்.
புற்றுநோய் : 4 பேர், தற்கொலை : 17 பேர், மாரடைப்பு : 23 பேர், விபத்து : 23 பேர், உடல் நலக்குறைவு : 33 பேர்
01/04/2022 முதல் 30/04/2022 – (கடந்த மாதம்) வரையில் 22பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை தலைமைக் காவலர் ராஜ்குமார் (புற்றுநோய்), தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பட்டாலியன் 1 (TSP- BN 1) கான்ஸ்டபிள் பாரத்குமார், கிருஷ்ணகிரி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் (SSI)
முனிராஜ், சென்னை கான்ஸ்டபிள் அருள்முருகன், திருச்சி, காவலர் தேர்வுப் பள்ளி SSI ஆதிலட்சுமி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். காஞ்சிபுரம் கான்ஸ்டபிள் உமாதேவி, திருச்சி கான்ஸ்டபிள் சுகந்தி, திருவள்ளூர் கிரேட் ஒன் கான்ஸ்டபிள் (Gr- 1) வேல்முருகன், கன்னியாகுமரி ஹெட் கான்ஸ்டபிள் (HC) கிறிஸ்டல் பாய் – ஆகியோர் சாலை விபத்தில் இறந்துள்ளனர்.
ஆயுதப்படை போலீஸ் (A.R.) கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸ் ரமேஷ், ராமநாதபுரம் (HC) கண்ணன், சென்னை (HC) ஜெயகுமார், SSI லிங்கசாமி (AR) மோட்டார் பிரிவு – ஆகியோர் உடல் நலக்குறைவால் இறந்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்ட
AR கான்ஸ்டபிள் முருகேசன், வேலூர் AR – Gr – 1 கான்ஸ்டபிள் வானவர்மன், திருச்சி ரயில்வே போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் சசிகுமார், திண்டுக்கல் போதை தடுப்புப் பிரிவு HC சுரேஷ்குமார், சென்னை SSI முனிவேல் ரவிச்சந்திரன், கோயம்புத்தூர் SSI நாட்ராயன், திண்டுக்கல் SSI குமார் ஆகியோர் இறந்துள்ளனர். சாதாரண மனிதர்கள் எப்போதும் போலீசைத்தான் தங்களின் உதாரண பிம்பமாகப் பார்ப்பார்கள். மனஉளைச்சல்- விபத்து – தற்கொலை- மாரடைப்பு – உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால் போலீசார் இறப்பது மக்களின் அந்த (மன) பிம்பத்தை உடைப்பது போன்றதே… போலீசின் இந்த நிலைமை மாற, எந்தெந்த வழிகளை கையாள முடியுமோ அத்தனை வழியையும் தமிழ்நாடு அரசு கையாள வேண்டியது காலத்தின் கட்டாயம் ! ந.பா.சேதுராமன்