தமிழ்நாடு அரசு பட்ஜெட் : முக்கிய அம்சங்கள் விபரம்!

தமிழக சட்டப்பேரவையில் நாளை (19.03.2022) வேளாண்துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 24ம் தேதி வரை நடைபெறும் எனவும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி பதில் அளிக்கிறார்.

தமிழக அரசின் 2022- 2023 பட்ஜெட் முழு விவரம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக ரூ.5.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டிலோ அல்லது வேறு வெளிநாடுகளிலோ கல்வியைத் தொடர தமிழக அரசு உதவி செய்யும்.
பேருந்துகள் நவீன மயமாக்கல், மின் பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.5375 கோடி நிதி ஒதுக்கீடு.

கொரோனாவால் இறந்த 327 முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.79.5 கோடி நிவாரணமும் ஒதுக்கீடு.

அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு.

சமத்துவபுரங்களை பராமரிக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு.

அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக ரூ.1300 கோடி வழங்கப்படும்.

மின்சார வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்; இதற்காக ரூ.13,108 கோடி நிதி ஒதுக்கீடு.

பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள்.

மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

குறுவை சாகுபடியை சிறப்பாக மேற்கொள்வதற்காக 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,966 கிலோ மீட்டர் கால்வாய் சீரமைக்கும் திட்டம்.

மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு.
கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை உயர்தர மனநல சேவைகளை வழங்க ரூ.40 கோடி ஒதுக்கீடு.

இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை 61% ஆக உயர்வு.

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு ரூ.1,520 கோடி ஒதுக்கீடு !

தாம்பரம், கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளை மேம்படுத்த தலா 10 கோடி என 60 கோடி ஒதுக்கீடு.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.17,901.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னைக்கு அருகில் ₹300 கோடியில் தாவரவியல் பூங்கா!

கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

வரையாடுகளை பாதுகாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு.

புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி செலவில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.1547 கோடி நிதி ஒதுக்கப்படும்.

சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கப்படும்.

தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும்.

இளைஞர் விளையாட்டு நலனுக்காக ரூ.293 கோடி நிதி ஒதுக்கப்படும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

மத்திய அரசின் வீடு கட்டும் திட்டமான அம்ருத் 2.0 திட்டத்திற்கு ரூ.2,030 கோடி ஒதுக்கீடு.

சேத்துமடை, ஏலகிரியில் சூழல் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

வட சென்னையில் ரூ.10 கோடியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.

குத்துச்சண்டை, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி விளையாட்டரங்குகள் அமைக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும்.

1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கப்படும்.

அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிதாக அரசுப் பள்ளிகளில் 18000 வகுப்பறைகள் கட்டப்படும். இதற்காக ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும்.

வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது.

இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்திற்கு ரூ.8008 கோடி நிதி ஒதுக்கீடு.

முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4816 கோடி ஒதுக்கப்படும்.

சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களைத் தடுக்க சமூக ஊடகங்கள் சிறப்பு மையம் அமைக்கப்படும்.

வள்ளலாரின் 200வது ஆண்டை ஒட்டி வள்ளலார் பல்லுயிர் பாதுகாப்புத் திட்டம் ரூ.20 கோடியில் செயல்படுத்தப்படும்.
பழமையான தர்காக்கள், தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கப்படும்.
தீயணைப்புத் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்நிலைகள் பாதுகாப்பு, அரசு நிலங்களை மீட்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுய உதவிக்குழுக்களுக்கு கடன், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.
முதற்கட்டமாக ரூ.190 கோடி செலவில் 149 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும்.
விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 64 அணைகளைப் புனரமைக்க ரூ.1064 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்வளத்துறைக்கு ரூ.7338.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.61%-ல் இருந்து 3.80 சதவீதமாகக் குறையும்.
முதல்வரின் முகவரியின் திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கொற்கையில் ரூ.5 கோடியில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

– பிரீத்தி எஸ் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *