காஞ்சிபுரம் சரக காவல்துறை ஆய்வுக் கூட்டம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் சரகத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்ட காவல்துறை ஆய்வு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட. போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்திற்கு ஆலோசனைகள் வழங்க வந்த டி.ஜி.பி.க்கு வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார், சத்திய பிரியா டி.ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட போலீஸ் எஸ்.பி.கள், சுதாகர், அரவிந்த், வருண்குமார்., ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் குற்றங்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும், அதனை மேம்படுத்துவது குறித்தும், பழைய குற்றங்களை கண்டுபிடிக்க மூன்று மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை எப்படி மேம்படுத்துவது என்றும் அறிவுரை வழங்கினார். சட்டம் ஒழுங்கை சீர்படுத்தல், ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது முழுவீச்சில் நடவடிக்கை எடுத்தல், சாலைப் பயணத்தை பாதுகாப்பானதாக உருவாக்க திட்டம் வகுத்தல், புலன் விசாரணைத் திறனை மேம்படுத்தல், இணையதள குற்றங்களை தடுத்திட திட்டமிடல், சைபர் பிரிவு போலீசாரின் ஆற்றலை சிறப்பாக்குதல், பொதுமக்கள் கொடுக்கும் புகாரின் மீது உரிய விசாரணையை விரைவு படுத்தி தீர்வு காணுதல், ஆயுதப்படை (கவாத்து) பணியை முறைப் படுத்துதல் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உரிய ஆலோசனைகள் டிஜிபி மூலம் தெளிவுபடுத்தப் பட்டது. காஞ்சிபுரம் சரகத்தில் போதைப்பொருள் கடத்தல், சட்டம்-ஒழுங்கு சீரமைப்பு, சவாலான குற்றங்களில் தீவிரம் காட்டுதல் முயற்சி எடுத்து கண்டுபிடித்தல், போன்றற்றில் சிறப்பாக செயல்பட்ட 10 குழுக்களை சார்ந்த சிறந்த காவலர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுவாகப் பாராட்டி ரொக்கப் பரிசுகளை (ரிவார்டு) வழங்கினார்.
ஆய்வுக் கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் எஸ்.பி.கள், டி.எஸ்.பி.கள் தனிப்படை போலீசார் கலந்து கொண்டனர்.
– பிரீத்தி எஸ். –